

கார்த்திக் சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்?எதற்கு இப்போ வந்தீங்க?என்ற கேள்வியை மானாமதுரையில் பொதுமக்கள் கேட்க? திமுக ஒன்றிய செயலாளர் பொதுமக்களை ஒருமையில் திட்டிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் வெள்ளக்கரை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற கார்த்திக் சிதம்பரத்திடம் பொதுமக்கள் இதுவரை என்ன செய்தீர்கள் என்று கேள்விகளாக கேட்டு தொலைத்து எடுத்திருக்கிறார்கள்,இதைப் பார்த்துக் கொண்டிருந்த திமுக ஒன்றிய செயலாளர் சேங்கைமாறன் பொதுமக்களை ஒருமையில் மிரட்டிய வீடியோ சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் தீயாய் பரவி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவத்தால் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக போட்டியிடும் அதிமுக,பாஜக,நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இந்த சம்பவத்தை தற்போது பிரச்சாரமாக செய்து வருகின்றனர்.இந்த வீடியோ பொதுமக்கள்,சமூக ஆர்வலர்களும் இதெல்லாம் கார்த்திக் சிதம்பரத்துக்கு தேவையா? இவர் போட்டியிடனும்னு யார் அழுதா? என்று கமாண்ட் அடித்துக் கொண்டு வீடியோக்களை சேர் பண்ணி வருகின்றனர்.

