திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் முத்துக்குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் முத்துக்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோட்டம் பிடித்துள்ளனர்.இந்த கொலை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொழில் போட்டி மற்றும் முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது