• Sat. Apr 20th, 2024

ஸ்பூனில் சாப்பிட்டால் உடம்பு குறையுமா?

இந்த காலத்து பொண்ணுங்களுக்கு, இருக்கிற பிர்ச்சனைகளோட வரிசைல்லா மிக முக்கியமான ஒன்னு, உடம்ப குறைக்கிறது.. உடம்ப கண்ட்ரோலா வச்சுகிறது நல்ல விஷயம் தான்.. ஆனா, அதுக்காக சரியான முறைய ஃபாலோ பண்றது என்னமோ ஒரு சிலர்தான்..

சாப்பாடு சாப்பிடாம பட்டினியா இருக்கிறது. அப்புறம் அந்த மொத்த பசிக்கும் ஒட்டுமொத்தமாக சாப்பிடறது..

மத்தவங்கள பாத்து அவங்க என்னென்ன முறைகள ஃபாலோ பன்றங்களோ அத அப்டியே ஃபாலோ பண்றது.. அடுத்தவங்கள பார்த்து நல்ல காரியங்கள மட்டும் எடுதுக்கிறது ரொம்ப நல்ல பழக்கம் தான்.. ஆனா அவங்களோட உடல் வாகு என்ன, அவங்களோட பழக்க வழக்கங்கள் என்ன? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நமக்கும் அவங்களுக்கும் ஒப்பிட்டு பார்த்திட்டு அதுக்கு அப்புறமா தான், நமக்கான முறை என்னவோ அத திட்டமிட்டு அத சரியா ஃபாலோ பண்ணனும்..

உதாரணத்துக்கு, சிலர் வேர்கடலய டயட் முறைகள்ள உபயோகப்படுத்துவது வழக்கம்.. ஆனா ஒரு சிலருக்கு வேர்கடலை ஒவ்வாமை இருக்கும்.. சில சமயம் மரணம் கூட நேரலாம்.. நான் இத பயமுறுத்த சொல்லல.. உண்மையாவே சிலருக்கு நடந்திருக்கு..

உலக புகழ் பெற்ற கதையான, டா வின்சி கோட் அப்டிங்கிற கதைல்ல இந்த வேர்கடலை அலர்ஜியை ஒரு செயல் யுக்தியா பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும்..

இது போலவே சிலருக்கு, கத்தரிக்காய், பூசணிக்காய் போன்ற உணவு பொருட்களுக்கு அலர்ஜி இருக்கும்.. இப்படி எல்லாத்தையும் கவனிச்சு சரியான உணவு முறைய தேர்ந்தெடுக்கவேண்டும்..

சரி.. இப்ப நம்ம பாய்ண்ட்- க்கு வருவோம்.. ஸ்பூனில் சாப்பிட்டால் உடம்பு குறையுமா…
இதுக்கான சயன்ஸ் காரணம் ரொம்ப சாதாரணமா தோன்னும்..

உணவோட அளவு நம்ம கையில எடுத்து சாப்பிடுறதுக்கும் , ஸ்பூனால் சாப்பிடுறதுக்கும் வித்தியாசம் உண்டு..

அதே மாதிரி, உணவோட ருசிக்கும் வேறுபாடு உண்டு.. இந்த ஸ்பூன் இதெல்லாம் பெரிய சிதம்பர ரகசியம் ஒன்னும் இல்லங்க..

உன் சமையல் அறையில் படத்துல, ஒரு சீன்ல்ல பிரகாஷ் ராஜ் சொல்வாரே.. சாப்பாட வேகமா முழுங்காத.. மெதுவா ருசிச்சு சாப்பிடு.. அதான் இங்க பாய்ண்ட்..

ஸ்பூனால் எடுத்து சாப்பிடுற கொஞ்ச உணவ நம்ம வாயில போட்டு நல்ல மெண்ணு சாப்பிடும்போது, வயிற்றுக்கும் சரி, மனசுக்கும் சரி.. ஒரு திருப்தி ஏற்படுமாம்.. இதனால குறைவான உணவ சாப்பிட்ட உடனே அதிக உணவு சாப்பிட்ட உணர்வு ஏற்படுமாம்.. இதன் மூலமா சாப்பாடு அளவும் குறையுது.. அப்போ இதுவும் ஒரு வகையான உடம்ப குறைக்கும் முறைதான..

முடிஞ்சா பின்பற்றி பாருங்களேன்.. காச விராயமாக்கி, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது போல இது கேடு விளைவிக்கக் கூடிய முறை இல்ல..
ஸ்பூன் பத்தின இன்னொரு தகவலையும் இங்க சொல்றேன்.. இது குழந்தைகளுக்காக.. eating with silver spoon..
அதாவது குழந்தைகளுக்கு சில்வர் ஸ்பூனில் சாப்பாடு குடுகுறது மூலமா ஸ்பூனில் உள்ள நல்ல வேதியியல் பொருள் ஆனது, உடலுக்கு நன்மை தரக் கூடியது..
மதிய உணவுக்கு சாப்பாட கையால கலக்காம ஸ்பூன் கொண்டு கலக்க சொல்ல காரணமும் இதுதான்.. இப்படி நிறைய நன்மைகள் உண்டு.. இந்தக் குறிப்பு உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நம்புகிறேன்..

மறுபடியும் சொல்றேன்.. உடம்ப குறைக்கிறது நல்ல விஷயம் தான்.. அத சரியான முறையில் ஃபாலோ பண்றது தான் புத்திசாலித்தனம்..
பிரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *