• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டுமா..?வந்து விட்டது புதிய வசதி..!

Byவிஷா

Apr 28, 2023

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த சொத்துக்கள் மார்க்கெட் விலையை விட குறைந்த விலையில் பின்னர் ஏலத்தில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது சொத்துக்கள் மற்றும் வீடுகளை ஏலத்தில் விடுவதற்கு புதிய செயலியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஏல ஆப் (e-auction app) மூலம் சொத்து பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆன்லைன் செயலியில் சொத்துக்கள் குறித்த ஆரம்ப விலை மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவைகள் இருக்கும். இவற்றை வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த புதிய செயலி மூலம் அடுத்த 5 வருடங்களில் 1 லட்சம் ஏலங்களை நடத்துவதற்கும், அதன் மூலம் குறைந்தது 6 லட்சம் சொத்துகளையாவது விற்பனை செய்ய வேண்டும் எனவும் பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளது.