இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் சார்பாக நேரடி முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு பாலிசியின் பிரிமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். திருப்பூர் அஞ்சல் கோட்டை நிர்வாகத்தின் கீழ் தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இவர்களுக்கான நேர்காணல் ஜூலை 19ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தாராபுரம் பகுதி மக்கள் கலந்து கொள்ளலாம். அதனைப் போலவே திருப்பூர் பகுதியில் ஜூலை 20ஆம் தேதியும், மேட்டுப்பாளையம் பகுதியில் ஜூலை 21ஆம் தேதியும் நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள கட்டாயம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிலா மண்டல் பணியாளர்கள், சுய தொழில் மட்டும் வேலை தேடும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.
மேலும் இந்த பணிக்கு விருப்பமுடையவர்கள் தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் மகள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை வழங்கப்படும். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வைப்புதொகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.