• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

வங்கியில் வேலை வேண்டுமா..உடனே அப்ளை பண்ணுங்க

Byவிஷா

Sep 16, 2025

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான மகாராஷ்டிரா வங்கியில், 2025-26ஆம் நிதியாண்டில் 350 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்:

டெபியுட்டி ஜெனரல் மேனேஜர்
உதவி ஜெனரல் மேனேஜர்
தலைமை மேனேஜர்
சீனியர் மேனேஜர்
மேனேஜர்

வயது வரம்பு:

டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.

உதவி ஜெனரல் மேனேஜர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.

தலைமை மேனேஜர் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம்.

சீனியர் மேனேஜர் பதவிக்கு 25 முதல் 38 வரை இருக்கலாம்.

மேனேஜர் பதவிக்கு 22 முதல் 35 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் BE/ B.Tech, B.Sc/M.Sc, CA, CFA, CMA, MCA எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். பதவியை பொறுத்து அனுபவம் மாறுப்படும். குறைந்தபட்சம் 3 முதல் அதிகபடியாக 12 வருடங்கள் வரை அனுபவம் தேவை.

சம்பளம்:

டெபியூட்டி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,40,500 முதல் 1,56,500 வரை
உதவி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,20,940 முதல் 1,35,020 வரை
தலைமை மேனேஜர் – ரூ. 1,02,300 முதல் 1,20,940 வரை
சீனியர் மேனேஜர் – ரூ. 85,920 முதல் 1,05,280 வரை
மேனேஜர் – ரூ. 64,820 முதல் 93,960 வரை

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால், எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம். இறுதி தேர்வு நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். நேர்காணலுக்கு வருபவர்கள், அனைத்து அசல் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பாணை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்கும் நபர்கள் https://bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.