• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மீரா ஜாஸ்மின் கிளாமராக நடிப்பது ஏன் தெரியுமா?

Byதன பாலன்

Feb 16, 2023

தமிழ் சினிமாவில் ரன், புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.

இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், மீரா ஜாஸ்மின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மீரா ஜாஸ்மினின் பிறந்தாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘விமானம்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடர உள்ளதாகவும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.