• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நல்லா நடிப்பேனான்னு சந்தேகப்பட்டாங்க! – சுமன்!

இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.. ஷங்கர் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான சிவாஜி திரைப்படம் மாபெரும் வசூலை அள்ளியது. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இந்த திரைப்படத்தில் ஸ்ரேயா சரண், மணிவண்ணன், வடிவுகரசி, சாலமன் பாப்பையா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..

படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார் நடிகர் சுமன். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சுமன் முதல் முறையாக வில்லனாக நடித்த திரைப்படம் சிவாஜி. இதில் ஆதிசேஷன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுமனுக்கு நல்ல பெயரும் கிடைத்தது. இந்நிலையில் ஆதிசேஷன் கதாபாத்திரம் குறித்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள் பற்றி சுமன் பகிர்ந்துள்ளார்.

‘திடீரென ஒருநாள் இயக்குனர் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க என்னை கேட்டார்கள் நானும் உடனடியாக சம்மதித்தேன். கதை கேட்கின்றீர்களா என்றார்கள் இல்லை தேவை இல்லை என்றேன்.. பரவாயில்லை கேளுங்கள் என்றார்கள் கேட்டேன்.. கதை நன்றாக உள்ளது எந்த குறையும் இல்லை என கூறினேன். அப்பொழுது ஷங்கர் வெளிநாட்டில் இருந்தார். இந்தியா வந்தவுடன் ஷங்கர் நேரில் வர சொன்னார். ஆதிசேஷன் கதாபாத்திரத்தையும் அதன் லுக் பற்றியும் விவரித்தார். இந்த படத்திற்காக மீசையை எடுக்க வேண்டியதிருக்கும் என்றார் நானும் சம்மதித்தேன்.

முதலில் பேண்ட் சர்ட்டில் போட்டோ ஷூட் நடத்தினோம் அது செட்டாகவில்லை பின் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை மற்றும் தங்கப் பல் வைத்து எடுக்கப்பட்ட கெட்டப் மிகப் பொருத்தமாக இருந்தது. ஆனால் நான் இதுவரை கதாநாயகனாக நடித்து விட்டு முதல்முறையாக வில்லனாக நடிப்பதால் நான் நல்லா நடிப்பேனா என அனைவரும் சந்தேகப் பட்டனர். பின் படம் வெளியான போது பெண்கள் உட்பட பலரும் என்னுடைய கதாபாத்திரத்தை பாராட்டினர்.’ என்றார்!