• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படங்களை ஒப்பிட்டு பேசாதீர்கள் – ஆரி!

சிவ மாதவ் இயக்கத்தில், பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” 3.6.9 “. இந்த படத்தை 81 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர். படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய ஆரி ” தமிழ் சினிமாவில் இப்போ ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். இரண்டு படங்களையும் ஓப்பிடுவதே பேசுவது தவறு. யாஷ் சார் நடித்த கேஜிஎஃப் ஒரு பான் இந்திய திரைபடம், ஆனால் விஜய் சார் நடித்த பீஸ்ட் ஒரு தமிழ் மொழிக்கான திரைப்படம், தயவுசெய்து இரண்டையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

எனக்கு மிகவும் வருத்ததக்க விஷயம் என்னவென்றால் நேற்று ஒரு தயாரிப்பாளரை சந்தித்து பேசும்போது அவர் ஒரு காணொளியை காண்பித்து ஒரு தியேட்டர் ஓனர் ஒருவர் டாக்டர் படம் நல்லா இருந்தது வசூல் ஆனது ஏன் ஓடினது எதற்காக ஓடியது என்று தெரியவில்லை ஆனால் நல்ல வசூல் கொடுத்தது என சொன்னார். அடுத்தாக பீஸ்ட் படத்தை பற்றி படம் நல்ல வசூல் செய்து வருகிறது என்றும் சொன்னார்.

அடுத்தாக கேஜிஎப் படத்தை வைத்து ஒரு விமர்சனம் சொன்னார்.. எனக்கு ஒன்னு புரியல இரண்டு வருடங்களாக தியேட்டரில் எந்த படமும் வெளியாகாமல் திரையரங்கு உரிமையாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். இன்றைக்கு படம் வந்துள்ளது பீஸ்ட் படத்திற்கும் வருமானம் தான் கொடுக்கிறார்கள் கேஜிஎப் படத்திற்கும் காசு கொடுத்துதான் படம் பார்க்கவாரங்க இலவசமாகப் படம் பார்க்கவில்லை. நீங்களும் இலவசமாக படம் பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு படத்தை உயர்த்தி, மற்றொரு படத்தை தாழ்த்தி பேசாதீர்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.