• Fri. Mar 29th, 2024

தமிழகத்தை ஆளும் இரண்டு சூரியன்கள் – தருமபுர ஆதீனம்

தமிழக கவர்னரின் பெயர் ரவி என்றால் சூரியன். ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால், தமிழகத்திற்கு இரு சூரியன்கள் உள்ளன என தருமபுர ஆதினம் கூறியுள்ளார்.தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக கவர்னருக்கு பா.ஜ., மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பளித்தனர்.
தருமபுரம் ஆதீனம் வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். கவர்னருக்கு தருமையாதீனம் நடராஜர் உருவச்சிலை வழங்கினார். அதனையடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கவர்னர் திறந்து வைத்தார்.

கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் கவர்னர் பங்கேற்று பேசினார்கள். தொடர்ந்து தர்மபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார். கவர்னர் வருகையை முன்னிட்டு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாக தர்மபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் உரையாற்றுகையில்: தருமபுர ஆதீன அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 800 மாணவர்கள் பயிலும் முதல் பள்ளியாக உள்ளது. தமிழக கவர்னரின் பெயர் ரவி.

ரவி என்றால் சூரியன். ஆளுகிற ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால் தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள் உள்ளன. மறதி ஒரு வரம். மறதி இருந்தால் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும், பசுக்களைப் பராமரிக்க வேண்டும்.

கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் தான் பண்பாடு மற்றும் கலாச்சார சீர் கெட்டுப் போயுள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றார்.தொடர்ந்து பேசிய ரவி கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதால் தர்மபுரம் குருமகாசந்நிதானம் கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு உள்ளவர்களை பார்க்கும் போது உண்மையான இந்தியா என் கண்முன்னே தெரிகிறது.

இந்திய நாடு வளமான நாடு. தருமபுர ஆதீனம் நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது சிறப்பு கூடியது. குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள், கார்கில் போர் நடைபெற்ற போது தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது. இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள் ஒருவருக்கொருவர் சண்டை யிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள் இதற்குத் தீர்வு நாகரீகம் கலாச்சாரம் கல்வி நீதி போதனைகள் பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே முடியும் என்றார். இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் என்றும் மதத்தால் மொழியால் உணவால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம் என்று கூறினார். இந்தியாவினுடைய ஆன்மீகம் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டது அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *