குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளம் வருகிறது என்றால் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து எச்சரிக்கை செய்திருக்க வேண்டும், உயிர் போன பின் எச்சரிக்கை செய்கின்றனர் – வரும் முன் காப்போம் என்பது தான் பேரிடர் தத்துவம் ஆனால் வரும் முன் காப்போம் என்பதை காற்றில் பறக்க விட்டுவிட்டு வந்த பின் பார்ப்போம் என்பது தான் திமுகவின் தத்துவமாக உள்ளது – என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் அன்னதான விழாவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் துவக்கி வைத்தார்., முன்னதாக அத்திபட்டி புதுமாரியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி நலமுடன் வாழ வேண்டி அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,
மாநில பேரிடர் படை தயாராக இருப்பதாக செய்திகள் வருகின்றனர். வருவதற்கு முன் காப்பது தான் பேரிடர் தத்துவம். வருவதற்கு முன்பாக மக்களை காப்பாற்ற வேண்டும், ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் இந்த பேரிடரை எதிர்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர்கள் எம்ஜீஆர்-யும், ஜெயலலிதாவும் சொல்வார்கள்.,
ஆனால் திமுகவின் தாரக மந்திரம் என்னவென்றால் வரும்முன் காப்பதை காற்றில் பறக்க விட்டுவிட்டு, வந்த பின் பார்ப்போம் என்று புதிய தத்துவத்தை கையாளுகிறார்கள்.,
அதனால் மக்கள் துண்பத்திலும், துயர கடலிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களை மீட்கவேண்டும் என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என மக்கள் எல்லா இடங்களிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.,
குற்றாலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கின்றனர். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதனால் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என சொல்லியிருக்க வேண்டும்., ஆனால் சிறுவன் அடித்து சென்று உயிர் பரிபோன பின்பு, குடும்பத்தோடு பதற்றத்தோடு ஓடி வருகிற காட்சியை பார்க்கும் போது ஒரு அரசு இங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
காற்றாற்று வெள்ளம் வருகிறது என்றால் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுத்து எச்சரிக்கை செய்ய வேண்டும். குளிப்பதை தடை செய்ய வேண்டும்.
ஆனால் உயிர் போன பின் தடை செய்கிறோம் என்கின்றனர். இதே நிலை தான் தமிழ்நாடு முழுவதும் வந்ததற்கு பிறகு, உயிர் போன பிறகு, நிவாரண நடவடிக்கைகளும் சரியாக செய்வதில்லை.
அதனால் தான் சொல்கிறேன், வரும் முன் காப்பது தான் பேரிடர் தத்துவம், ஆனால் திமுகவின் தத்துவம் வரும் முன் பார்க்க மாட்டோம், வந்த பின் பார்ப்போம் என்ற நிலையை தான் பார்க்கிறோம்.
இது மக்களுக்கு உயிர்பலி சேதத்தை, பேரிடர் என்பதை தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது ஆனால் உயிர் சேதம், பொருட் சேதம், கால்நடை சேதம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும்., ஆனால் இவர்கள் அதைப்பற்றி சிந்திக்க நேரமில்லை.
திமுகவின் நினைப்பு எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் என்ன ஆகுமோ, ஏதாகுமோ, எவ்வளவு தோல்வியை சந்திக்க போகிறோம் என்ற கவலையிலேயே மூளையில் முடங்கி இருப்பதாக தான் தெரிகிறது.
போதை பொருளில் கூட ஏற்கனவே ஆய்வு கூட்டங்கள் நடத்தினார்., தடுக்க முடியவில்லை, 1ஓ, 2ஓ, 5ஓ வரை போய் ஓ போட்டது தான் மிச்சம்., இப்போது முதல்வரே ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார், இனிமேலாவது தடுப்பார்களா என பார்த்தால் காட்டுத்தீயாக பற்றி எரிகிறது போதைப்பொருள் கலாச்சாரம் தமிழ்நாட்டில்.
இதை தடுக்க வேண்டுமென்றால் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே முடியும் அதற்கு முதலமைச்சர் முன்வருவாரா என்பது தான் பிள்ளைகளை பெற்று, வளர்த்து ஆளாக்கி, வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிற பெற்றோர்களின் நிலையாக இருக்கிறது, இந்த நிலையெல்லாம் மாற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என பேட்டியளித்தார்.
