• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் பாக முகவர்கள், பாக களப்பணியாளர்கள் கூட்டம்

ByE.Sathyamurthy

Apr 29, 2025

சென்னை பெரும்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள், பாக களப்பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை துவக்கி ஆலோசனை வழங்குவதற்காக தலைமை கழகத்திலிருந்து சந்திரபாபு மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படி எல்லாம் பணியாற்ற வேண்டும் எப்படி எல்லாம் நம் முதல்வர் செய்த சாதனைகளை எடுத்துக் கூறி, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நம் வெற்றி பெற வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை புனித தோமையமலை ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வேதகிரி, மேடவாக்கம், எஸ்.டி.போஸ், கோவிலம்பாக்கம், சொக்கலிங்கம் இளைஞர் அணி அமைப்பாளர் எழில் பாண்டியன் மற்றும் கட்சியை நிர்வாகிகள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு இந்த ஆலோசனை கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள்.