• Thu. Apr 25th, 2024

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்த திமுக-பழனிசாமி காட்டம்

Byகாயத்ரி

Feb 7, 2022

திமுக ஆட்சிக்கு வருவதற்காக என்னென்ன பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள் என்பதை பொதுமக்கள் எண்ணி பார்க்கின்றனர் என பழனிசாமி சிவகாசி பிரச்சாரத்தில் கொந்தளித்தார்.

திமுக ஆட்சிக்குவந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்தார்கள். ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையில் நீட் தேர்வைரத்து செய்வோம் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால்அதற்கான முயற்சியை திமுக அரசு எந்த வகையிலும் மேற்கொள்ளவில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக அரசு. இப்போது வரை நீட் தேர்வு ரத்து என்னாச்சு என்பதை பொதுமக்கள் கேட்கின்றனர்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகள் ஒவ்வொறுவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். 5 சவரன்வரை தங்க ஜெயின் அடமானம் வைத்து இருந்தால் அதுவும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று அறிவித்திருந்தார்கள். மாதந்தோறும் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கொடுப்போம் என்று கூறினார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து அண்ணா திமுக  வலியுறுத்தியும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் 22 மாநிலங்களில்ள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. ஆனால் தமிழக அரசு பெற்றோலுக்கு மட்டும் மூன்று ரூபாய் குறைத்து விட்டு  டீசல் விலையை குறைக்கவில்லை. ஸ்டாலினை நம்பி 48 லட்சம் பேர் 5 சவரன் தள்ளுபடி கடனுக்காக காத்திருந்தனர். ஆனால் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று தற்போது திமுக அரசு கூறி வருகிறது. இதனால் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு தண்டனையாக 35 லட்சம் பேர் 12 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டி வருகின்றனர். இப்போதுதான் திமுக ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில்  கடந்த 8 மாத ஆட்சியில்  லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போட்டியிடும் அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும். அடுத்து நான் சிவகாசி வரும்போது அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தியைத் தான் கேட்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் என்று சொன்னாலே அதிமுகவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அவரது உரையை முடித்தார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *