• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் தொடங்கிய திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு..!

Byவிஷா

Jan 21, 2024

திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு, சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த இளைஞரணி மாநாட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் நேற்று மாலை மாநாட்டு திடலில் திரண்டு வந்தனர். இதையெடுத்து, நேற்று மாலை 1,500 டிரோன்களின் வர்ணஜாலம், பைக் பேரணியுடன் மாநாடு களைக்கட்ட தொடங்கியது.
திமுகவின் இளைஞரணி முதல் மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலி நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். அதன் பிறகு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது.
சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாநாடு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இளைஞர்களின் மாநாட்டில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகி, லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டு திடலில் பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் சிலைகளுக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
100 அடி உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 22 தலைப்புகளில் சொற்பொழிவரங்கம் நடைபெற உள்ளது.