90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி (திமுக) எம்.எல்.ஏ வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே உள்ளது.
இங்கு இன்று காலை 8 மணி அளவில் மானகிரி பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர் கணேசன் என்பவர் திடீரென தீக்குளிக்க முயன்றார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து மானகிரி கணேசன் கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்களுடன் அவர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிசிடசை பெற்று வருகிறார்.
90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவத்தால் மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
கணேசன் தீக்குளிக்க முயன்றது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.