சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி காட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது.
அந்தவகையில் சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, 1, 8 , 29, 49, 59, 94, 115, 121, 168, 174, 187 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 59-ஆவது வார்டில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி டெபாசிட் இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், கோவை மாநகராட்சியில் 16 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. கோவை மாநகராட்சியில் இதுவரை அறிவிக்கப்பட்ட 7 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.