• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக – விசிக பேச்சுவார்த்தை தொடங்கியது..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன!

இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, திமுகவுடன் காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது விசிக தலைவர் திருமாவளவன் முதல்வரை சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.