• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனுக்கு கத்தி குத்து!!

ByVasanth Siddharthan

Feb 21, 2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன்.

இன்று வீராசாமிநாதன் மதுரையில் நடைபெறும் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தயாராக இருந்த போது, அவரின் தோட்டத்திற்கு வந்த எரியோடு பகுதியை சேர்ந்த மணி என்பவர் வீராசாமி நாதனுக்கு பொன்னாடை போற்றியுள்ளார்.

அப்போது, சால்வையில் மறைத்து வைத்திருந்த சேவல் கத்தியால் வீராசாமிநாதன் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அதனை தடுக்க முயன்ற வீராசாமிநாதன் ஆதரவாளர் நாச்சிமுத்துக்கும் கத்தி குத்து ஏற்பட்டது.

காயமடைந்த வீராசாமிநாதன், வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய இளைஞரை, வேடசந்தூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.