மதுரை பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது அதில் மத்திய மாநில ஆளுங்கட்சிகளை விமர்சனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் உரை அமைந்தது.

இதனை கண்டிக்கும் வகையில் திமுகவினர் தொடர்ச்சியாக விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை முழுவதும் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் WHAT BRO, OVER BRO,அடக்கி வாசிங்க BRO என்ற வசனங்கள் உள்ளவாறு மதுரை முழுவதும் போஸ்டர்கள் திமுக சார்பாக ஒட்டப்பட்டுள்ளது.

விஜய் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் திமுகவினர் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.