• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாஸ்க் அணியால் வாக்குச்சாவடிக்கு வந்த திமுக எம்.பி.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளுக்கும் மற்றும் அரூர், பாலக்கோடு, பென்னாகரம்,பொ.மல்லாபுரம், கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வாக்காளர்கள் மூலம் தொற்று பரவாமல் இருக்க ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கையுறை அனைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறையை பின்பற்றி தருமபுரி நகராட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வந்தனர்.

ஆனால், தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் காந்தி நகரில் உள்ள வாக்குசாவடி மையத்திற்கு வந்து வாக்களிக்க வரிசையில் நின்றார். அப்போது அவர் முகக்கவசம் அணியாமல் நின்றதை பார்த்த அங்கிருந்த உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தான் என முனுமுனுத்தனர்.

பின்னர், வாக்குச்சாவடியில் இருந்த செய்தியாளர்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளீர்கள் எனக் கூறிய பிறகு சுதாரித்துக்கொண்ட எம்.பி.செந்தில்குமார் தனது பாக்கெட்டில் இருந்து முகக்கவசத்தை எடுத்து அணிந்துச்சென்று வாக்காளித்தார்.