• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திமுகவினர் கீழ்த்தரமான அரசியல் செய்யக் கூடியவர்கள் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

Apr 22, 2025

பாஜக அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவினர் பதற்றம் அடைந்திருப்பதாகவும் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் சூழ்நிலை கைதியாகவே அங்கு இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பேட்டி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி அவதூறாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர், பெண்கள் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன், சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவை தலைவர் விஜயகுமரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி வருவதை அனைத்து நிகழ்ச்சிகளிலும் செய்து வருகின்றனர். இதை திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் அனைவருமே மௌனம் வருவதாகவும் மற்ற அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் தெரிவித்தார்

முதல்வரின் கட்டுப்பாட்டில் எந்த ஒரு அமைச்சரும் இல்லை எனவும் , திமுக கட்சியே முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா என சந்தேகம் எழுகிறது என்றும், திமுக அமைச்சர்கள் இடையே ஈகோ இருப்பதாகவும், தான் தோன்றித்தனமாக திமுக கட்சிக்குள் குழப்பம் இருப்பதாகவும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், பொன்முடியை கைது செய்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்திருக்க வேண்டும் என்றார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அதற்கு துணை போனது திமுக, நீட் தேர்வு வேண்டுமென்று நீதிமன்றத்தில் வாதாடியவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான். சொன்னது எல்லாம் காங்கிரஸ் கட்சி, செய்தது எல்லாம் திமுக. ஆனால் பழி அதிமுக மீதா என கேள்வி எழுப்பினார்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து ஐந்து அமைச்சர்களை வைத்திருந்த பொழுது, இந்த கூட்டணி இனிக்கிறதா, தற்போது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மக்கள் மனதில் பிரளயம் ஏற்பட்டவுடன் திமுகவினரும், பதட்டத்தில் இருப்பதாகவும் திமுகவினருக்கு இந்த பதற்றத்தின் காரணமாக திமுக ஆட்சியில் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது
மட்டுமே. அது அவர்களுக்கு சாதாரணமானது. திமுக அரசியலில் கேவலமான எதையும் செய்வார்கள்.

திமுகவினர் கீழ்த்தரமான அரசியல் செய்யக் கூடியவர்கள். அதிகாரத்தை விஸ்வரூபம் செய்தே வாழ்ந்தவர்கள் திமுகவின் நாடகம் இனி தமிழகத்தில் எடுபடாது. திமுக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியும் முழு மனதுடன் அங்கு இல்லை. அங்கு உள்ள அனைவரும் சூழ்நிலை கைதியாகவே இருக்கின்றனர். எந்த நேரத்திலும் திமுக கூட்டணி உடையும். அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மனவேதனையில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.