• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்காக காத்திருக்கும் தி.மு.க..! ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி..!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர் நோக்கி திமுக காத்திருக்கிறது என சிங்கம்புணரி அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் இவ்வாறு கூறினார்.


நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தையும் தமிழக அரசு நிறைவு செய்து விட்டதாக தெரிவித்த அமைச்சர் கடந்த மூன்று தேர்தல்களிலும் எந்த யுக்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றதோ, அதைவிட கூடுதல் யுக்திகளை பயன்படுத்தி திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெரும் என்றும் தெரிவித்தார். அதிகமாக தாக்கிய கொரானா நோயை மருத்துவ துறையின் உதவியோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது என தெரிவித்தவர், அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ள ஓமைக்கரானை கட்டுப்படுத்துவது ஒன்றும் பெரிதல்ல என்றும் தெரிவித்தார்.