• Sat. Jul 20th, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி

அதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள்அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி இப்பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொண்டுதி.மு.க.வை வெளுத்து வாங்கினார்.

சிவகாசி

சிவகாசியில் கடந்த வாரம் நடைபெற்றக் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ’
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்தான் இன்றும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். தை பொங்கலுக்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த வேஷ்டி, சேலைதி்ட்டத்தைதான் இன்றும் அரசாங்கம் வழங்கி கொண்டு இருகின்றது. புரட்சிதலைவரின்திட்டங்கள் இன்றும் ஏழை எளிய மக்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்றுள்ளன. இன்றைக்கும் ரேசன் கடைகளில் சேலை வாங்கினால் கூட இது எம்ஜிஆர் சேலை என்றுமக்கள் கூறுகின்றனர்.  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிட்டா மிராசு தாரர்களுக்கு இந்தகட்சியை ஆரம்பிக்கவில்லை. கிழிந்த சட்டையையும் ஒட்டிய வயிறையும் பார்த்து ஆரம்பித்தகட்சி தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.  பாட்டாளிகள், படைப்பாளிகள்,நெசவாளிகள் வாழ்க்கைத்திறன் முன்னேற்றத்திற்காக இந்தக் கட்சியை புரட்சித்தலைவர்எம்ஜிஆர் ஆரம்பித்தார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கமே ஆகும் .இது மனிதர் ஆரம்பித்த கட்சி அல்லபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி. இன்று எம்ஜிஆர் பிறந்த நாளை ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்ஜிஆர், அம்மா. அவர்கள். இன்று அவர்களின் வழியில்எடப்பாடியார் கட்சியை,  சிறப்பாக செயலாற்றிக்கொண்டு வருகின்றார். புரட்சித் தலைவர்எம்ஜிஆர் அவர்கள் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டுக்கோப்பாக இராணுவ பலத்தோடு வளர்த்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிகாலத்தில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.
அம்மாவுடைய காலத்துக்கு பிறகு தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற
திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில்சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும்அம்மாவுடைய அரசு செயல்படுத்தவில்லை. விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பிரமாண்டமான மெடிக்கல் கல்லூரி அண்ணா திமுக ஆட்சியில் நாங்கள்தான் கொண்டுவந்தோம். சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் அரசு கலை அறிவியல்கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம். சிவகாசியில் ஒரு தனியாக கல்வி மாவட்டம் கொண்டு வந்தோம். சிவகாசி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் தீக்காயசிகிச்சை பிரிவு கொண்டு வந்தோம். திருத்தங்களில் புதிய பஸ் ஸ்டாண்ட் கொண்டுவந்துள்ளோம். சிவகாசி பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தியுள்ளோம்.அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது.தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய
பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுக ஆட்சியாளர்கள். அம்மா கொண்டு வந்த திட்டங்கள்,எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.அம்மா பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், திருமணம் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை இப்படி பல்வேறு அதிமுகவின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பகுதியாக குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். முதியோர்பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அதிமுக அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை தருவதாக சொன்ன திமுக இதுவரை
வழங்கவில்லை. திமுக கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். திமுக பொய்யை சொல்லிவாக்கு வாங்கினார்கள். தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுதனமாகசெங்கலை காட்டி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார். திமுக ஆட்சியில் யாரும் வாழமுடியாத அளவிற்கு விலையேற்றம் உள்ளது.இன்றைக்கு திமுக ஆட்சியில் வீட்டு வரி. சொத்து வரி. சிமெண்ட் விலை கூடிவிட்டது, செங்கல் விலை கூடிவிட்டது, மணல் விலை கூடிவிட்டது,மண் விலை கூடிவிட்டது மக்களைப் பற்றி சிந்திக்காத ஆட்சி, ஏழை மக்களின் வயிற்றில்அடிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதுஅரசு ஊழியர்கள் முதல்வரை எதிர்க்கட்சி தலைவராகவே அவர் இருந்திருக்கலாம் எனநினைக்கின்றனர். எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்காக குரல்கொடுத்த முதல்வர் தற்பொழுது அவர்களை கண்டு கொள்வதில்லை.தமிழகத்தில் 11 ஆயிரம் பேருந்துகள் இயங்காமல் உள்ளது. பேருந்துகளை சீரமைக்க முடியாதநிலை உள்ளது.திமுக ஆட்சியில் விலையேற்றம் காரணமாக தமிழகம் ஸ்தம்பித்துள்ளது திமுககட்சியினரை பாதுகாக்க ஆட்சி நடத்தவில்லை குடும்பத்தை பாதுகாக்கவே  ஆட்சி நடத்துகிறார்கள், திமுக கட்சியினரே திமுக ஆட்சியை விரும்பவில்லை.திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.முதல்வர் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை, அமைச்சர்கள் சொல்வதை முதல்வர் கேட்பதில்லை.அரசு சொல்வதை மக்கள் கேட்க தயாராக இல்லை.
தேர்தல் எப்பொழுது வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அதிமுகவில் சண்டைஏற்படும் போது திமுக உள்ளே புகுந்துவிடுவார்கள்.மக்கள் ஏற்றுக்கொண்டு திமுக ஆட்சிக்குவந்ததே இல்லை.நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில்புளியை கரைக்கிறது ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர்எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயராக இருந்து அதிமுகவை மீண்டும் ஆட்சியமர்த்த வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆட்சி மக்களாட்சி மக்கள் போற்றும் ஆட்சி. அண்ணா திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அரியணை ஏற எப்போது தேர்தல் வந்தாலும் நீங்கள் அண்ணாதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் ’’
என்றார்.

விருதுநகர்

விருதுநகர் பொதுக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி , ‘’புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடிய வசனங்கள் எல்லாம் இன்றும் வாழ்க்கையின் நடைமுறையாக உள்ளது. அவர்
சொன்னது எல்லாம் வேதவாக்காக உள்ளது. புரட்சித்தலைவர் சொன்னதெல்லாம் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. திமுக ஒரு தீயசக்தி என்றார். விலைவாசி உயர்வு ஏழைகளை வெகுவாக பாதித்து உள்ளது. திருச்சி சென்று மணல் எடுக்கச் சென்றால் அதிமுக ஆட்சியில் ரூ15ஆயிரத்திற்கு விற்பனை செய்த லோடு தற்போது 45ஆயிரம், 50ஆயிரம் கூறுகின்றனர். செங்கல் தயாரிக்க மண்  இலவசமாக அள்ள அதிமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டது.  தற்போது திமுக ஆட்சியில் செங்கல் செய்வதற்கு விலை கொடுத்து தான் மணல் வாங்கி தொழில் செய்கின்றனர்.
அதிமுக ஆட்சி மீது எடப்பாடியார் ஆட்சி மீது மக்கள் மத்தியில் எந்தவித அதிப்தியும்
கிடையாது. எங்களுடைய அலட்சியத்தில் தான் நாங்கள் ஆட்சியை இழக்க வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி கிடையாது துக்ளக்ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நினைத்ததை செயல்படுத்துகின்றனர்.மக்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. நமக்கு என்ன என்று ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். ஐந்து வருடங்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றனர்.அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்துகின்றனர். ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் கொந்தளித்து போய் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் என்று அரசுஊழியர்கள் நினைத்தனர். ஜாக்டோஜியோ அமைப்புகள் கொந்தளித்து போய் உள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே பழைய ஓய்வு திட்டத்தை கொண்டு வருவோம் என்று
திமுகவினர் கூறினர். தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த பைலைஅப்படியே ஓரங்கட்டி வைத்து விட்டனர். ஆட்சிக்கு வந்த முதல் கையேழுத்து  நீட் தேர்வைரத்து செய்வோம் என்று கூறினார்கள். இரண்டு ஆடுகளாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. படிக்கின்ற பிள்ளைகளை கூட படிக்க விடாமல் செய்துவிட்டனர்.

எடப்பாடியார் ஆட்சியில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5% இட
ஒதுக்கீடு செய்து ஏழை மாணவர்களும் மருத்துவ கனவை நினைவாக்கியவர் முன்னாள்
முதல்வர் எடப்பாடியார் அவர்கள். விருதுநகரில் ரூ.355 கோடியில் மருத்துவ கல்லூரிக்கு
எடப்பாடியார்  மற்றும் நான்தான் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தோம்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவ கல்லூரி இருக்கும் ஒரேகல்லூரி நமது விருதுநகர் மருத்துவ கல்லூரியாகும். இந்த மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தது நாங்கள்,அடிக்கல் விழாவில் எங்களது பெயர் இருக்கும், திறப்பு விழாவில் திமுகவினர் பெயர் இருக்கும. நாங்கள் முழுவதும் கஷ்டப்பட்டுகளை எடுத்து தண்ணி ஊத்துறது செடியை திமுகவினர் சத்தம் போடாமல் அறுத்துவிட்டு சென்று விட்டனர். கடலை செடி வெளியே இருக்கும் ஆனால் கடலை இருக்காது. கையை உள்ள விட்டு கடலை மட்டும் திமுகவினர் எடுத்துச் சென்று விடுவார்கள்’’.

ராஜபாளையம்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்குவது வேலையாக செய்து வருகின்றனர்.
யாருக்கும் எனது மனசாட்சிபடி 10 பைசாவுக்கு கூட துரோகம் செய்ததில்லை. கடவுள் மேல் நம்பிக்கை உள்ள நாங்கள் பயந்து கொண்டிருக்கிறோம். திமுகவினர் கடவுளையும் நம்புவதில்லை. மனிதர்களையும் நம்புவதில்லை. அதனால்தான் அனைத்து தவறுகளையும் செய்கின்றனர். கேட்பதற்கு ஆள் இல்லாத நிலை உள்ளது. தற்போது தில்லு முள்ளு ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுகவினர் வேலையை தற்போது தமிழக ஆளுநர் செய்து வருகிறார். பீகாரில் உளவுத்துறை அதிகாரியாக வேலை பார்த்தவர் திமுக கொண்டுவரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. எனவே எங்களது பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து விட்டோம். திமுகவுக்கு முடிவு கட்டும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார்.
கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி ஆண்டுகளை 5 இலிருந்துமூன்றாக குறைக்க முயன்ற திமுகவுக்கு பதிலடியாக தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்றமுறை செயல்படுத்தப்பட உள்ளது’’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *