

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குள்பட்ட 9, 10 வார்டுக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு ஆதரவாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.மதியழகன் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
இதில், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், அஞ்சுகிராமம் பேரூராட்சி திமுக தேர்தல் பொறுப்பாளர் டி.அரிகிருஷ்ணபெருமாள், அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ, துணைத்தலைவர் காந்திராஜ், கவுன்சிலர்கள் வீடியோகுமார், அய்யா சிவகுமார், பேரூர் துணை செயலாளர் சுந்தர்ராஜ், 13வது வார்டு செயலாளர் எஸ்.சுயம்புலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்கொடி, ரவி மற்றும் நிர்வாகிகள் சுயம்புலிங்கம், சுயம்பு, சொர்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

