

இந்த எதிர்ப்பலைகளை மீறி தான் சிதம்பரம் என்ற ஒரு சொல்லை வைத்து கார்த்திக் சிதம்பரம் சீட்டு வாங்கி வந்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினரே கை சின்னத்தை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவி வர நம் “அரசியல் டுடே” சார்பில் அங்கு என்னதான் நடக்கிறது என்று கள நிலவரத்தை அறிந்து கொள்ள களத்தில் இறங்கினோம் …
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்ற தொகுதிகளான சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட தொகுதி மக்களை சந்தித்து இந்த தொகுதியில் வெல்லப் போவது யார்? என்ற கேள்வியை மட்டும் முன் வைத்தோம்…
தொகுதி மக்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்டவை தான்..,

சிவகங்கையை பொறுத்தவரை கார்த்திக் சிதம்பரத்திற்கும் மக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது மக்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி இடையே உள்கட்சி பூசல் ,கூட்டணி கட்சியான திமுகவினரே எதிர்ப்பு, என பல்வேறு வகையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராகவே உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை திமுக உட்கட்சி பூசல் மானாமதுரை சட்டமன்ற தொகுதி தமிழரசி ஒரு பிரிவாகவும் ,மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பன் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த உள்கட்சி பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியினரே சிதம்பரத்திற்கும், கார்த்திக் சிதம்பரத்திற்கும் எதிராக ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார்கள்?
ஒண்ணுமே செய்யவில்லை.. அதனால்தான் காங்கிரஸ் கட்சியினரே குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராமசாமி, சுதர்சன் நாச்சியப்பன் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை இந்த நான்கு சட்டமன்ற தொகுதியிலுமே காங்கிரஸ் கட்சியினரையும், திமுக கட்சியினரையும் ஒன்று சேர்த்து இந்த முறை கார்த்திக் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்
இந்த எதிர்ப்பலைகளை மீறி தான் சிதம்பரம் என்ற ஒரு சொல்லை வைத்து கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தி சப்போட்டோடு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு சீட்டு வாங்கி வந்துள்ளார். இதுதான் சிவகங்கை காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலவரம்.
மேலும் சிறிது நேரம் இளைப்பாரி விட்டு பேசத் தொடங்கிய தொகுதிவாசிகள்.., சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை செந்தில்நாதன் என்ற அசைக்க முடியாத ஒரு சக்தியை அதிமுக வளர்த்து வந்திருக்கிறது. இதை மையமாக வைத்து செந்தில் நாதனின் அறிவுரையின்படி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுகவின் வேட்பாளராக சேவியர் தாஸ் – ஐ களம் இறக்கி இருக்கின்றனர்.
இந்த சேவியர் தாஸ் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் மாவட்டச் செயலாளருமான செந்தில் நாதனின் துணையோடு அதிமுக செய்த பத்தாண்டு சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்து கொண்டும், கார்த்திக் சிதம்பரத்தின் மீதுள்ள அதிர்ப்தியை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக செய்கின்ற பிரச்சாரம் எளிமையாக இருந்தாலும் கூட திமுக என்ற விடியல் அரசு என்று பேசிக் கொண்டிருக்கின்ற செயல்களை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி மக்கள்அதிமுக செய்கின்ற பிரச்சாரத்தை மட்டுமே ரசிக்கின்றனர்அதிமுக செய்கின்ற பிரச்சாரத்தை மட்டுமே ரசிக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இதைக் கண்ட கார்த்திக் சிதம்பரம் கட்சியினரே தனக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி வரை புகார் தெரிவித்தும் புகாருக்கு எந்த அசைவும் இல்லாமல் இருக்கவே, சேவியர் தாஸ்க்கு ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறது.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இரண்டாம் இடத்தில் இருந்த அதிமுக தற்போது ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மேல் உள்ள அதிர்ப்தியால் முதல் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று தொகுதி மக்களாகிய நாங்கள் உங்களுக்கு வாக்குறுதியாக கூறுகிறோம் என சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வாசிகள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்
கள நிலவரத்தின் படி சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்திக் சிதம்பரமும், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ், நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி, இவர்கள் அனைவரையுமே முந்தி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பாலையால் மக்கள் மனதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.
எது எப்படியோ…! சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலை துளிர் விடப்போகிறது என்பதுதான் நிதர்சனம்.

