• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தி.மு.க. ஆன்மீக அரசாக திகழ்கிறது- தருமபுரம் ஆதீனம்

ByA.Tamilselvan

Nov 3, 2022

மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவில் கலந்துகொண்ட தருமபுரம் ஆதினம் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்வதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் வழங்கினார். பின்னர் அவரது தலைமையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது. நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். நான் ஏற்கனவே கூறியபடி ஆன்மீக அரசாக தி.மு.க. திகழ்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். அரசு விழாவாக கொண்டாடப்படுவதின் மூலம் இனி அனைத்து தரப்பினரும் சதய விழாவை கொண்டாடுவர் உலகம் இவ்வாறு அவர் கூறினார்.