
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி.சிதம்பரம் இவ்வாறு கூறினார்.

மேலும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறை தெரியாததால் தான் மத்திய அரசு நகை கடன் போன்ற அபத்தமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றவர்,
நகை கடன் குறித்து கொண்டு வந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சனை குறித்த கேள்விக்கு, பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நடப்பது குடும்ப பிரச்சினை, அரசியல் பிரச்சனை அல்ல என்றவர். இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், அதிமுக ஒரு மிகப்பெரிய கட்சி. அது பாஜகவுடன் கூட்டணி வைப்பதை கடை மட்ட தொண்டன் கூட விரும்பவில்லை என்றும் கூறினார்.
