• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர்- இபிஎஸ்

ByA.Tamilselvan

Sep 7, 2022

10 திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிவருகின்றனர் என அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவால் தான் சி.பி.சி.ஐ..டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர். ராகுல்காந்தி காங்கிரசை வளர்க்க நடை பயணம் செல்கிறார். தி.மு.க. கார்ப்பரேட் கட்சி அ.தி.மு.க. தொண்டர்களால் ஆன கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.