சிவகங்கை தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மக்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களை இல்லத்தின் நிர்வாகி புஷ்பராஜ் என்ற மலர்மன்னன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சையத் இப்ராகிம் மகாராணி, உரிமையாளர் வீனஸ் ராமநாதன், திட்டக்குழு உறுப்பினர், நகர் மன்ற உறுப்பினர் முத்து கண்ணன் தாளாளர் ரமண விலாஸ் மேல்நிலைப்பள்ளி, பொறியாளர் மகேந்திரன் பணி நிறைவு குடிநீர் வடிகால் வாரியம் ராமச்சந்திரன் பட்டிமன்ற பேச்சாளர் பகிரத நாச்சியப்பன் சுகனேஸ்வரி பிஜேபி மாவட்ட துணை தலைவர் கோவிந்தன் ஒன்றிய கவுன்சிலர் சகாயராணி முதன்மை காப்பீட்டு அலுவலர் பாலமுந்திரி சிவா, ரமேஷ்கண்ணன் கண்காணிப்பாளர் சிவகங்கை மருத்துவர் கல்லூரி மருத்துவமனை அறிவழகன் நீதித்துறை சரஸ்தார் அன்புதுரை பட்டிமன்ற நடுவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.