• Fri. Mar 29th, 2024

குமரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை கண்காட்சி துவக்கம்..!

கன்னியாகுமரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் தீபாவளி விற்பனை கண்காட்சி நாகர்கோவிலில் இன்று தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த கண்காட்சியில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 6 கோடி ரூபாய்க்கு துணி மணிகள் விற்பனை இலக்கு. தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் சிறப்பு விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் வழக்கம். அந்த வகையில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியை தொடங்கியது. இக்கண்காட்சியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கண்காட்சியில் விதம் விதமான துணிகள் விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் திருபுவனம் பட்டு புடவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள் போர்வைகள் படுக்கை விரிப்புகள் தலையணை உறைகள் வேட்டி லுங்கி பத்து சட்டைகள் உள்ளிட்ட பல்வேறு துணிமணிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 6 கோடி ரூபாய்க்கு துணி மணிகள் விற்பனை இலக்கு நிர்ணகிக்கபட்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.


விசுவல்

1. நாகர்கோவிலில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் தீபாவளி விற்பனை கண்காட்சி தொடக்கம் –
2. அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்ப்பு.
3. விதவிதமான, வித்தியாமான புது ரக துணி மணிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *