• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்

ByA.Tamilselvan

Feb 8, 2023

இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை நீர்மூழ்கி வீரர்கள் தேடிவருகின்றனர்.
மண்டபம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். தென்கடலோர பகுதி, வடக்கு கடலோர பகுதிகளிலும் ரோந்து சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை பாம்பன் பகுதி அருகே நடுக்கடலில் ஒரு நாட்டு படகு வருவது கடலோர போலீசாருக்கு தெரியவந்ததும் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் தங்களை நோக்கி வருவதை கண்டதும் படகில் இருந்த 2 நபர்கள் படகில் வைத்திருந்த சில பொருட்களை எடுத்து கடலில் வீசினர். அந்த நாட்டு படகை போலீசார் சுற்றி வளைத்தனர். படகில் இருந்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். படகில் இருந்து வீசிய பொருள் பற்றி கேட்ட போது எதுவும் வீசவில்லை என்று அவர்கள் கூறினர். படகில் வந்த நபர்கள் பலகோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்திருக்கலாம். அவர்கள் தங்களை கண்டதும் கடலில் தங்கக்கட்டிகளை வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து போலீசார் கடலில் முத்துகுளிக்கும் மீனவர்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் தங்கக்கட்டிகள் வீசப்பட்டதாக சந்தேகப்படும் இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டுப்படகில் வந்த நபர்கள் இலங்கையை சேர்ந்தவர்களா? கொள்ளையர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.