• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பா.ம.க வில் இனி மாவட்ட‌ செயலாளர்கள் பொறுப்பு மட்டுமே…

Byமதி

Oct 17, 2021

ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னத்தில் நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் பா.ம.க.வினர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் 47-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை பா.ம.க. கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சை சின்னத்தில் நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் பா.ம.க.வினர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் வகையில், இணையவழி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியில் மாவட்ட அளவில் உள்ள மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பொறுப்பு கைவிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

எனவே, இனி பாட்டாளி மக்கள் கட்சியில் மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பொறுப்பு வகிப்பார்கள் என பா.ம.க நிறுவனர்‌ மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.