கோவில்பட்டி அத்தை கொண்டான் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி சீனிவாசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி , கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இந்த பள்ளி அணியினர் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக , தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்தும் மாநில அளவில் அனைத்து மாவட்டங்களும் கலந்து கொள்ளக்கூடிய போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற இருக்கின்றது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இந்தப் பள்ளி கபடி அணியினரை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பாராட்டி மாநில அளவிலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறியதுடன், இந்த பள்ளி அணியினருக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் புதிய சீருடைகளை அளித்து உத்வேகப்படுத்தினார். இந்நிகழ்வில் கோவில்பட்டி திமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு ஜெய கண்ணன் தலைமை வகித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி வசந்தா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு மாத்தையா உடன் இருந்தார். இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு செல்வகுமார் அனைவரையும் வரவேற்று நன்றியும் கூறினார் .








; ?>)
; ?>)
; ?>)