விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் நிறுவனம் சார்பாக, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், போதை, வலைதளங்களால் ஏற்படும் பிரச்சனைகள், பாலியல் அத்துமீறல் போன்ற பிரச்சனைகள் குறித்தும் இப்பிரச்சனைகளுக்கு எதிர்பார்க்கப்படும் தீர்வுகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில், மாவட்ட சுகாதார கல்வி தொடர்பு அலுவலர் . சங்கரேஸ்வரன், மாவட்ட சுகாதார விரிவாக்க கல்வியாளர் . மாரிச்சாமி, வட்டார சுகாதார புள்ளியியலாளர் முரளிகண்ணன், கார்த்திகேயன் ஸ்பீச் நிறுவன திட்ட இயக்குநர் பொன் அமுதன் நிதி இயக்குனர் செல்வம், மக்கள் தொடர்பாளர் ஸ. பிச்சை, சைல்டு லைன் அலுவலர்
மஹாலட்சுமி, பெண்கள் அவசர உதவி மையம், மாவட்ட சமூக நலத்துறை தமிழரசி, முருகேஷ்வரி மற்றும் ஸ்பீச் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.