• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிவகாசி மகளிர் கல்லூரியில், கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை..!

ByKalamegam Viswanathan

Aug 10, 2023
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. 
இந்தக் கண்காட்சியை கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் கண்காட்சியை துவக்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் சுதாபெரியதாய் வரவேற்றார். இளம் தொழில் முனைவோர் அமைப்பு, தொழில் முனைவோர் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் மேம்பாட்டு மையம் சார்பில் கண்காட்சி, கைத்தறி துணிகள் விற்பனை நடைபெற்றது. கைத்தறி துணிகள் சிறப்பு கண்காட்சியை சிறப்பு விருந்தினரான, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன், கோவில்பட்டி ஆடைகள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி ரமேஷ் துவக்கி வைத்தனர். 
கண்காட்சி ஏற்பாடுகளை வணிகவியல் தலைவர் சன்மிஷ்ட்டா தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட கைத்தறி துணிகள் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து, தங்களுக்கு தேவையான கைத்தறி ஆடைகளை உற்சாகத்துடன் வாங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக, ஆடை வடிவமைப்பியல் துறை தலைவர் அகஸ்தியா அம்பிகா நன்றி கூறினார்.