• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டம் புத்தகத் திருவிழா 2024 நடைபெற உள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

ByI.Sekar

Feb 28, 2024

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழா 03.03.2024 முதல் 10.03.2024 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின்போது. அரங்குகள் அமைக்கும் பணி, நுழைவாயில் அமைக்கும் பணி, மேடை அமைப்பு. தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிற்பதற்கான இடம், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள் உணவுப்பொருள் விற்பனை கூடங்கள், பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், புத்தக திருவிழாவிற்கு வருகை தருகின்ற பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி. சுகாதார வசதி, மற்றும் நாள்தோறும் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த தேவையான தூய்மை பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.
இவ்வாயின்போது, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி உள்ளிட்ட பலர் இருந்தனர்.