இராஜபாளையத்தை சேர்ந்த சரித்திர குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர் மீது பல வழக்கு பதிவு செய்யப்பட்டது சிறை சென்று வந்துள்ளார். மேலும் தங்கப்பாண்டி பல குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து, ஈடுபடாமல் தடுப்பதற்காக குற்றவாளி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயசீலன் உத்தரவு பேரில் தங்கபாண்டியன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து குற்றவாளி தங்கபாண்டியனை மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு
சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.