

சேலத்தில் பொது மக்களுக்கு 1000 மரக்கன்றுகள் கொடுத்த தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் பிறந்த நாளையொட்டி இந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர் டேனியல் தலைமையில் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் கொய்யா, மா, பலா, நாவல், பூமருது, துளிர் கனி, விளாம்பழம் உள்ளிட்ட மரக்கன்றுகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ஆசை தம்பி, துணை செயலாளர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார் துணைத்தலைவர் தனசேகரன், மாவட்ட செயலாளர் ஆண்ட்ரூஸ் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

