• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

ByKalamegam Viswanathan

Feb 25, 2023

மதுரை கிழக்கு தொகுதியில் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக OPS அணியினரால் 500 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், சிலைடு உள்ளிட்ட பாடத் தொகுப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…
தமிழகமெங்கும் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மதுரை கிழக்கு தொகுதி அதிமுக OPS அணியினர் அம்மாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 500 பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம், சிலைடு உள்ளிட்ட பாடத்தொகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மதுரை கிழக்கு பகுதியைச் சேர்ந்த Dr.தேன் சுகுமாரன்,செல்லப்பாண்டி, மீனாட்சி சுந்தரம், ராகு தேவன், செல்வராஜ், பாண்டியன், மலையாளம், சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக OPS அணியினர் கலந்து கொண்டனர்.