• Thu. Apr 18th, 2024

பண மதிப்பிழப்பு நடவடிக்கை வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

ByA.Tamilselvan

Jan 2, 2023

பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாறுபட்ட தீர்ப்புகளை இருநீதிபதிகள் வழங்கியுள்ளர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயன் சர்மா உள்ளிட்ட 58 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் இன்று தீர்ப்பை அறிவித்தனர். நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியதாவது: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான 58 ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்த விதிமீறலும் இல்லை. மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை. 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு போதிய அவகாசம் வழங்கி உள்ளது.
இந்நிலையில் நீதிபதி பி.வி. நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய அவகாசம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *