மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெயலட்சுமி கூடல் நகர் பகுதியில் பிரதம மந்திரியின் சூரிய ஒளி மின் திட்ட அனுபவம் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் நுகர்வோர்களிடம் சோலார் மின் இணைப்பு வழங்குவதில் உள்ள முன்னுரிமைகளை பற்றி தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மின் நுகர்வோர் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் இடையே ஒரு சிறிய கலந்துரையாடலை நிகழ்த்தினார். மின் பயனாளிகளுக்கு ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தொடர்ந்து எந்த ஒரு தகவலுக்கும் தன்னை அணுகுமாறு பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.