• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

ByA.Tamilselvan

Aug 11, 2022

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளம் கிராமம் அருகே நடைபெற்று வரும் அக ழாய்வில் சுடு மண்ணால் செய் யப்பட்ட ஆண் உருவம் கொண்ட பொம்மை கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் தொல் லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் முன்னதாக சுடு மண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளை யாட்டுப் பொருட்கள் கிடைத்தன. பின்பு, ஆறாவதாக தோண்டப்பட் டுள்ள புதிய அகழாய்வு குழியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண்ணாலான திமிலு டன் கூடிய காளை உருவம் மற்றும் பெண் உருவ பொம்மை ஆகியவை யும் கண்டறியப்பட்டது. மேலும், தங்க ஆபரணமும் சமீபத்தில் கிடைத்தது. இந்நிலையில், புதனன்று நடை பெற்ற அகழாய்வில் சுடு மண் ணால் செய்யப்பட்ட ஆண் உரு வம் கொண்ட பொம்மை கண்ட றியப்பட்டது. இந்த பொம்மையில் தலை இல்லை. உருவத்தின் நீளம் 7.1 செ.மீட்டரும், அகலம் 6.9 செ. மீட்டரும் உள்ளது. இதன் மூலம், இப்பகுதியில் வாழ்ந்த தொன்மையான மனி தர்கள் கலைநயம் மிக்கவர்களா கவும் அழகிய வடிவுடன் கூடிய பெண் மற்றும் ஆண் உருவ பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றையும் உருவாக்கும் திறன் பெற்றுள்ள வர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.