• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் சுசி கணேசன் மீண்டும் தமிழில் படம் இயக்க வருகிறார்.

2002-ம் ஆண்டு ‘பைவ் ஸ்டார்’ என்ற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசி கணேசன்.

2003-ம் ஆண்டு ‘திருட்டுப் பயலே’, 2004-ம் ஆண்டு ‘விரும்புகிறேன்’ மற்றும் 2009-ம் ஆண்டு ‘கந்தசாமி’ என்ற நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.


அதன் பின்பு தமிழில் படம் இயக்கும் வாய்ப்புக்கள் அவருக்கு அமையாததால் இந்தியில் பக்கம் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார் சுசி கணேசன். தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்இதையடுத்து தமிழில் தான் இயக்கவிருக்கும் படத்தின் தலைப்பினை சுசி கணேசன் அறிவித்துள்ளார். அந்தப் புதிய தமிழ்ப் படத்திற்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார்.

1980-களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க, முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இதன் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாக கூறுகிறார் சுசிகணேசன் இந்தப் படத்தை சுசி கணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.