விஜய் நடித்த வில்லு, அஜீத் நடித்த ஏகன், ஜெயம்ரவி நடித்த பேராண்மை, நந்தலாலா உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம்
திரைப்பட விநியோகத் தொழிலில் சர்வதேச அளவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்நிறுவனம் 2500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமைகளை வாங்கி வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம் தமிழில் படங்களை தயாரிக்க அடிப்படை காரணமாக இருந்தவர் ஐங்கரன் கருணாமூர்த்தி சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபடவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரிக்கும் 25வது படத்தின் அறிவிப்பை 2022 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வெளியிட்டு நேற்றையதினம் நிறங்கள் மூன்று என்றுபெயரையும் அறிவித்துள்ளதுஅந்தப்படத்தை, துருவங்கள் பதினாறு, மாஃபியா, தனுஷ் நடிப்பில் இன்னும் வெளிவராமல் இருக்கும் மாறன் ஆகிய படங்களை இயக்கியுள்ள கார்த்திக்நரேன் இயக்குகிறார்.
இப்படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சனவரி 5 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி மார்ச் மாதம் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.