திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 20% வரை உள்ளது
மத்திய குழு தனது அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்…. குழுவில் இடம் பெற்றுள்ள மணிகண்டன் புதுக்கோட்டை மாவட்டம் risகல்லாகோட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர்
பேட்டி

தமிழகத்தில் குருவை சாகுபடி நடந்து முடிந்து அறுவடை செய்யப்பட்டு நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் முதல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 17 சதவீத வரை ஈரப்பதம் கொண்ட நெல்மணிகள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லில் ஈரப்பதம் என்பது அதிகரித்து காணப்படுகிறது மத்திய அரசு விதிப்படி 17 சதவீத வரை ஈரப்பதம் கொண்ட நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பது விதி
விவசாயிகளின் நலன் கருதி இதுவரை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசின் கோரிக்கை விடுத்தது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு மூன்று குழுக்களை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது
இதில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை துணை இயக்குனர் ஷாகி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் தன்னை குறித்து ஆய்வு செய்தது.
குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருந்த நெல்லில் மாதிரிகளை எடுத்து சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றது.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லாக்கோட்டை பந்துவா கோட்டை மத்திய குழு சோதனைக்காக எடுத்துச் சென்றது.
கலெக்டர் அருணா வேண்டுகோளின் படி எவ்வளவு சதவீதம் ஈரப்பதம் உள்ளது என்பது குறித்து அங்கேயே ஈரப்பதம் கண்டறியும் கருவியை வைத்து ஆய்வு செய்ததில் 19% ஈர்ப்பதம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை பேசிய மத்திய குழுவில் வந்த உறுப்பினர் மணிகண்டன் திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 20% வரை ஈரப்பதம் உள்ளது கண்டறியப்பட்டது.
எங்களின் ஆய்வறிக்கையை ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்
என்று கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)