• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஒரு மணி நேரம் மழையை கூட தாங்காத திண்டுக்கல் மாநகராட்சி பகுதி..,

ByS.Ariyanayagam

May 6, 2026

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஒரு மணி நேரம் மழையை கூட தாங்க முடியாது அளவுக்கு ஆங்காங்கு தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மக்களைப் பற்றி சிந்திக்காத திண்டுக்கல் மாநகராட்சியால் ஒரு மணி நேரம் மழையில் தேங்கிய தண்ணீரால் மக்கள் அவதிப்பட்டனர். எப்பொழுது தீரும் மக்களின் பிரச்சனை என பொதுமக்கள் நொந்து கொள்கின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கமலா நேரு ஆஸ்பத்திரி பகுதி, RM காலனி.தாடிக்கொம்பு சாலை என நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சரியான வடிகால் வசதி செய்யாததால் ஆங்காங்கும் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.