இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது வருகிறது.
அந்த வகையில், வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 93 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை.
விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #BeastHits200CRs ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். சில ரசிகர்கள் “எவ்ளோ எதிர்மறை விமர்சனங்கள் வேணா வரட்டும்.. எவ்ளோ பெரிய படம் வேணா clash-க்கு வரட்டும்.. தளபதி படம் பாக்ஸ் ஆபீஸ்-ல சொல்லி அடிக்கும்.” என கூறிவருகிறார்கள்.