• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

* ஊதியம் வழங்காததை கண்டித்து ஆதிதிராவிடர் நலத் துறை சமையல் பணியாளர் குடும்பத்துடன் தர்ணா*

சேலம் மாவட்டத்தின் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டு. உறைவிடப் பள்ளி ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்டோர் சமையல் செய்பவர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டு காலமாக விடுதி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளியில் சமையல் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் ஆதிதிராவிட நலத் துறை யினர் இருந்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த சமையலர் மற்றும் குழந்தை மற்றும் மனைவிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நபர்கள் மட்டும் ஆதிதிராவிட நலத் துறை அலுவலகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சமையல் பணியாளர் கூறும்போது, ஆதிதிராவிட நலத்துறை சார்பில் உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு சமையல் செய்து உணவு வழங்கி வருகிறோம் என்றும், கடந்த 2 ஆண்டு காலமாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் எங்கள் குடும்பம் மிகவும் அவதியுற்று வருவதாகவும் பிழைக்க முடியாமல் தவித்து வருவதாகவும், இது குறித்து இதுவரை 28 முறை மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்காததால் வேறு வழி தெரியாமல் மாவட்ட ஆட்சியர் வாயிற்படி முன்பு குடும்பத்துடன் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், எங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்தனர். ஆதிதிராவிட நலத்துறை சார்பில் சமையல் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது