• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றம் : சௌமியாஅன்புமணி போட்டியிடுகிறார்

Byவிஷா

Mar 23, 2024

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் அரசாங்கம் என்பவர் மாற்றம் செய்யப்பட்டு, சௌமியாஅன்புமணி போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் காஞ்சிபுரம் தவிர்த்து மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
இதில் தருமபுரி தொகுதியில் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்புமணி போட்டியிடவில்லை.
இந்த நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கான பாமக வேட்பாளர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். அரசாங்கத்துக்குப் பதில், அன்புமணிராமதாஸின் மனைவி, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.