• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சிலம்பரசனை தாமதமாக பாராட்டிய தனுஷ் அண்ணன் செல்வராகவன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் .ஜே .சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 25ஆம் தேதி வெளியான படம் மாநாடு.

தமிழ்நாடு திரையரங்குகளில் இப்படம் சிலம்பரசன் திரையுலக வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படம் இதையடுத்து மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் வெங்கட்பிரபு.

கடந்த 24ஆம் தேதி மாநாடு படம் சோனி லைவ் வலைதளத்திலும் வெளியானது மேலும் மாநாடு படத்தைப் பார்த்துவிட்டு பல திரையுலக பிரபலங்கள் படக்குழுவை பாராட்டிய நிலையில், செல்வராகவனும் தற்போது பாராட்டு தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில் தாமதமாக மாநாடு பார்த்ததற்கு மன்னிக்கவும்.

ரசித்து பார்த்தேன். சிம்பு, எஸ்.ஜே. சூர்யா அருமை. யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடா முயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று தனது பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.